×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஓசூரில் பொக்லைன் வாகன உரிமையாளர்கள் ‘ஸ்டிரைக்’

ஓசூர், பிப்.18: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பொக்லைன் வாகன உரிமையாளர்கள் நல சங்கத்தினர் 3 நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். ஓசூர் மாநகரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொக்லைன்கள் இயங்கி வருகிறது.  கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில்,  பொக்லைன் இயந்திர உரிமையாளர் நலசங்கம் சார்பில், சுமார் 200க்கும்  மேற்பட்ட பொக்லைன்களை நிறுத்தி வைத்து நேற்று காலை முதல் வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொன்லைன் வாகன உரிமையாளர்கள் கூறுகையில், ‘டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, புதிய வண்டி விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வரக்கோரி, தொடர்ந்து 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்காவிட்டால், தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர்.  

10ம் வகுப்பு மாணவி கடத்தல் தேன்கனிக்கோட்டை அருகே பள்ளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய், தேன்கனிக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.அதில், மெலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடராஜ் மகன் சூர்யா (21) என்பவர் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், எஸ்ஐ கஜலட்சுமி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்

Tags : vehicle owners ,strike ,Hosur ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்