×

தேர்தல் பணிகளிலிருந்து 2 அதிகாரிகள் விடுவிப்பு

 

திருவனந்தபுரம்: அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட தேர்தல் ஆணைய ஆவணம் ஒன்றில், பாஜவின் முத்திரை இடம்பெற்றிருந்த விவகாரம் தொடர்பாக, கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக கேரள துணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு செக்‌ஷன் அதிகாரியை அவர்களது பழைய துறைகளுக்கே திருப்பி அனுப்பினார். இந்தச் சம்பவம் குறித்து கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பி.பி. நூஹ் ஐஏஎஸ் நடத்திய விசாரணைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Chief Electoral Officer ,Ratan U. Kelkar ,BJP ,Kerala Deputy ,Chief Election… ,
× RELATED மே.வங்கம் ஊடுருவலுக்கான பாதையாக மாறி விட்டது: அமித் ஷா தாக்கு