×

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பற்றி சிபிஐ விசாரணை கேட்ட வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

 

புதுடெல்லி: கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வழக்கு விசாரணையின் போது வேலையில்லாத இளைஞர்கள் பத்திரிகை மற்றும் சமூக செயல்பாடுகளை நோக்கி நகர்வதை கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளோடு ஒப்பிட்டார். இது சமூக இணைய தளங்களில் வேகமாக பரவிய நிலையில், நாடு முழுவரும் உள்ள வேலையில்லா இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ‘‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் எனும் சமூக வலைதள கணக்கை அரசியல் உத்தி வகுப்பாளரான அபிஜித் திப்கே தொடங்கினார். இதையடுத்து ஆறு நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பாலோவர்ஸ்களை தன் பக்கம் இழுத்தது.

இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதள பக்கங்களை ஒன்றிய அரசு முடக்கியது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ராஜா சவுத்ரி என்பவர் தரப்பில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்புடைய நபர்கள் குறித்த பின்புலத்தை விசாரிக்க சிபிஐ-யிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் சமூக வலைதள கட்சியை உருவாக்கி இந்திய நீதித்துறைக்கு களங்கம் விளைவுத்துள்ளனர் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘இந்த விவகாரத்தை நாங்கள் விசாரிக்கப் போவது இல்லை. குறிப்பாக கரப்பான் பூச்சி விவகாரத்தை இவ்வளவு உணர்ச்சிவசமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கூறி, அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : CBI ,Jatiya Janata Party ,Supreme Court ,New Delhi ,Chief Justice ,Surya Kant ,
× RELATED டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்