- பிஜூ ஜனதா தளம்
- பாஜக
- புவனேஸ்வர்
- பிஜு ஜனதா தளம்
- நவீன் பட்நாயக்
- ஒடிசா
- ராஜ்ய சபா
- தேபாஷிஷ் சமந்தராய்
- தேபாஷிஷ்
புவனேஷ்வர்: ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்தின் தலைவரான நவீன் பட்நாயக்கின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர் மாநிலங்களவை எம்பியான தேபாஷிஷ் சமந்தராய். இந்நிலையில் தேபாஷிஷ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும், எம்பி பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கட்சியில் தான் அவமதிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை அவர் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தொடர்ந்து பாஜவில் இணைய உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் பாஜவில் இணைவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
