×

சென்னை தி.நகர் தொகுதியை ஒதுக்க கோரி பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை: அதிமுகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து கோஷம்

 

சென்னை: சென்னை திநகர் தொகுதியை ஒதுக்க கோரி பாஜக தலைமை அலுவலகம் திடீரென இரவில் முற்றுகையிடப்பட்டது. அப்போது அந்த தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து பாஜகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது.

அந்த கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் ஒரு தொகுதி தான் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, மயிலாப்பூர் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. கடந்த முறை பாஜகவுக்கு சென்னையில் ஆயிரம் விளக்கு, துறைமுகம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தி.நகர் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து திநகர் பகுதியை சேர்ந்த பாஜகவினர் நேற்று இரவில் திடீரென சென்னை பாஜக தலைமை அலுவலகமாக கமலாயம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தி.நகரில் பாஜகவுக்கு வாங்கு வங்கி என்பது அதிகமாக உள்ளது.

அந்த தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். மேலும் அதிமுகவுக்கு அந்த தொகுதியை ஒதுக்க கூடாது என்றும் வலியுறுத்தினர். திடீரென பாஜகவினர் கமலாலயம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே, பல்வேறு இடங்களில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது கூட்டணிக்குள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chennai Thi ,BJP ,Nagar ,Adamuwa ,Chennai ,Chennai Thinagar ,Supreme Court ,Adimuka ,Tamil Nadu Assembly ,
× RELATED திமுகவில் போட்டியிடும் 164...