×

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், மார்ச் 28: ஜெயங்கொண்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜெயங்கொண்டம்-செந்துறை சாலையில் உள்ள அன்னை தெரசா கல்வி குழுமத்தின் சார்பில் நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், நர்சிங் கல்லூரி மாணவிகள் இணைந்து பள்ளி வளாகத்தில், 100 சதவீதம் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்,

உங்கள் வாக்கு, உங்கள் உரிமை, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் உள்ளிட்டவைகளை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பெற்றோர் மற்றும் உறவினர்களை கண்டிப்பாக வாக்களிக்க கூறுவோம் என உறுதிமொழியும் ஏற்றனர். நிகழ்ச்சியில் அன்னை தெரசா கல்வி குழும தாளாளர் பரப்பிரம்மம் முத்துக்குமார், தலைமையில் பள்ளி தாளாளர் உஷா முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Jayankondam ,Mother Teresa Educational Group ,Senthurai Road ,
× RELATED திருச்சி மாவட்ட 9 தொகுதிகளில் ஒரேநாளில் 23 பேர் வேட்பு மனுதாக்கல்