- பூர்த்துக்கோட்டை தாலுகா
- பிரதாப்
- திருவள்ளூர்
- மாவட்டம்
- தேர்தல் அலுவலர்
- ஊதுக்கோட்டை தாலுகா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருவள்ளூர் மாவட்டம்
ஊத்துக்கோட்டை, மார்ச் 28: ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பதட்டமான வாக்கு சாவடிகளை திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதாப் ஆய்வு செய்தார். தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் 344 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில், மொத்தம் 6 வாக்குசாவடிகள் பதட்டமானவையாகும். ஊத்துக்கோட்டை தாலுகாவில் மொத்தம் 151 வாக்கு சாவடிகள் உள்ளது. இதில், மெய்யூர், லட்சிவாக்கம் ஆகிய 2 வாக்குசாவடிகள் பதட்டமானவையாகும். இந்த பதட்டமான வாக்குச்சாவடிகளில் மெய்யூர் வாக்கு சாவடியை நேற்று மாவட்ட கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் (கும்மிடிப்பூண்டி), உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஊத்துக்கோட்டை தாசில்தாருமான ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, ஒதப்பை அருகே உள்ள கார் உதிரிபாக கம்பெனியில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்டவர்களை வைத்து அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நடத்தினர்.
