×

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கோவை,மார்ச்27: வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை சுந்தராபுரம் சிட்கோ பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் அபிப் ரகுமான் (35). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது தாயாரை சந்திக்க சென்றார். அதன் பின்னர் மறுநாள் காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த ஒரு கிராம் தங்க கம்மல் மற்றும் தண்ணீர் மோட்டர் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடி சென்று இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அபிப் ரகுமான் அளித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

அதில் அபிப் ரகுமான் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது பிள்ளையார் புரம் செந்தமிழ் நகரை சேர்ந்த முகமது அன்சர் (25) மற்றும் சுகுணாபுரத்தை சேந்த ஆசிக்அலி (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

 

 

Tags : Coimbatore ,Abib Rahman ,CIDCO ,Pillayarpuram ,Sundarapuram, Coimbatore ,
× RELATED கோவை மின்வாரிய அலுவலகங்களில் ஆன்லைன்...