சென்னை: திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தங்களை திணிக்க கூடாது, என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: யாருடைய உரிமைகளை, வாழ்வை பாதிக்கிறதோ, அவர்களது கருத்துகளையே கேட்காமல் திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தங்களை திணிக்க கூடாது. திருநர் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் என இயற்றப்பட்டுள்ள சட்டத்தை திருநர் சமுதாயத்தினரே எதிர்க்கிறார்கள் என்றால், அது ஏன் என்று ஆராய வேண்டுமே ஒழிய, அதனை திணிக்க கூடாது. ஒன்றிய பாஜ அரசு இம்முயற்சியை நிறுத்தி, திருநர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் திருநர்களின் உண்மையான இசைவை பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
