×

பொதுமக்கள் குறைதீர்வு முகாம் போலீஸ் கமிஷனர் அருண் நேரடியாக மனு பெற்றார்

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகாமில் முதியவர்கள், பெண்கள் உட்பட 23 பேரிடம் போலீஸ் கமிஷனர் அருண் நேரடியாக புகார் மனுக்கள் பெற்றார். சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று பொது மக்களுக்கான குறைதீர்வு முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் கமிஷனர் அருண் முகாமில் கலந்து கொண்டு, முதியவர்கள் மற்றும் பெண்கள் என 23 பேரிடம் தனித்தனியாக அவர்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்கள் பெற்றார். பின்னர் வாங்கிய மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்துறை நிர்வாகி பிரிவு துணை கமிஷனர் சுப்புலட்சுமி உடன் இருந்தார். அதேபோல் சென்ைன பெருநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி அந்தந்த துணை கமிஷனர்கள் அவர்களின் அலுவலகங்களில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்கள் பெற்றனர்.

Tags : Police Commissioner ,Arun ,Chennai ,Chennai Police Commissionerate ,
× RELATED கொடைக்கானலில் இரவு நேரத்தில் உலா...