×

சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட கால்வாய் நீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

தண்டராம்பட்டு : சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட கால்வாய் நீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும்.

பொன்விழா கண்ட இந்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. அணை முழு கொள்ளளவு எட்டியதனால் அணையில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி விவசாயிகள் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனால் வலது புறம், இடதுபுறம், கால்வாய் வழியாக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் சாத்தனூர் அணை 99.90 அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சாத்தனூர் அணையில் உள்ள சிறுவர் பூங்கா, முதலைப்பண்ணை, கலர் மீன் கண்காட்சி, நீச்சல் குளம், படகு குளம், சிறுவர் பூங்கா முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். வலது புறம் இடதுபுறம் கால்வாய் வழியில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Tags : Chattanur Dam ,THANDARAMPATU ,SATANUR DAM ,Chathanoor Dam ,Tiruvannamalai district ,Golden Jubilee ,
× RELATED 4 மாவட்ட மக்கள், விவசாயிகளுக்கு...