×

பழுதான குடிநீர் குழாயை சீரமைக்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் முயற்சி

க.பரமத்தி, பிப்.16: தார்சாலை பணிகளுக்கு தோண்டி பழுதான குடிநீர் குழாயை சீரமைக்க கேட்டு காலிக்குடங்களை ரோட்டில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சு வார்த்தைக்கு பிறகு உடனே குடிநீர் வழங்கப்பட்டது. க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சி காங்கேயம்பாளையம் சுற்று பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்காக கடந்த சில நாட்களுக்கு முன் பொக்லைன் வாகனம் மூலம் சாலையோரங்களில் மண் நிரப்பும்போது குடிநீர் குழாய் உடைந்ததாக பொதுமக்களால் கூறப்படுகிறது. இதனால் தார்சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பொதுமக்கள் குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி கேட்டதாகவும் இதனை சாலை அமைக்கும் காண்ட்ராக்டரின் கீழ் பணிபுரிவோர் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதே பகுதியில் சாலை மறியலில் ஈடு பட முடிவெடுத்து காலிகுடங்களை தார்சாலை நடுவே வைத்தனர். இது பற்றி தகவலறிந்த க.பரமத்தி போலீசார் பொதுமக்களிடமும் சாலை அமைக்கும் காண்ட்ராக்டரின் கீழ் பணிபுரிவோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு உடனே உடைந்த குழாயை சீரமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : women ,
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்