×

சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரோர் 2026: முன்னாள், இந்நாள் வீரர்கள் பங்கேற்பு

 

சென்னை: ஐபிஎல் போட்டிகள், வரும் 28ம் தேதி துவங்கவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், முன்னாள் மற்றும் இந்நாள் சிஎஸ்கே வீரர்களை ஒரே களத்தில் அரங்கேற்றும் வகையிலும், ‘சிஎஸ்கே ரோர் 2026’ என்ற நிகழ்ச்சியை நேற்று முதன் முறையாக நடத்தியது. சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சிகள் நேற்று கோலாகலமாக நடந்தன. நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தது.

நேற்று பிற்பகல் 5 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சிகளை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன், முரளி விஜய், பத்ரிநாத், டுவெய்ன் பிரேவோ உள்ளிட்டோரும் தற்போதைய அணியில் உள்ள, எம்எஸ்தோனி உள்ளிட்ட வீரர்களும் பங்கேற்றனர்.

 

Tags : CSK Roar 2026 ,Chepauk, Chennai ,Chennai ,IPL ,Chennai Super Kings ,CSK ,CSK Roar ,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ்; சீறி பாய்ந்த...