×

புதுவையில் 9 தொகுதிகளுக்கு பாஜ வேட்பாளர்கள் அறிவிப்பு: ஒன்னு ஊசல்

 

புதுவையில் வருகிற ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(23ம் தேதி )கடைசி நாளாகும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜ, அதிமுக, லஜக தொகுதி பங்கீட்டை நேற்று முன்தினம் இறுதி செய்தது. என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜ 14 இடங்களிலும் மற்றும் அதிமுக, லாட்டரி அதிபர் மாரட்டின் மகன் சார்லஸ் கட்சியான லட்சிய ஜனநாயக கட்சிக்கு தலா 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பாஜ 10 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நேற்று மதியம் அறிவித்தது.

அதன்படி, ராஜ்பவன் தொகுதியில் பாஜ தலைவர் ராமலிங்கம், மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மணவெளி தொகுதியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஊசுடு தொகுதியில் தீப்பாய்ந்தான் எம்எல்ஏ, காலாப்பட்டில் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, முதலியார்பேட்டையில் அமைச்சர் ஜான்குமார், திருநள்ளாறில் ஜிஎன்எஸ் ராஜசேகரன், நிரவி டிஆர் பட்டினத்தில் டிகேஎஸ்எம் மீனாட்சி சுந்தரம், மாகேயில் தின்ஷன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுவரை உருளையன்பேட்டை தொகுதியில் மட்டும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த தொகுதியில் போட்டியிட பிரபலமான பாஜ வேட்பாளர் இல்லை என தெரிகிறது. மேலும் இந்த தொகுதியை அதிமுகவும் கேட்டு வருவதால் வேட்பாளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என பாஜ வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags : Bajaj ,New Delhi ,National Democratic Alliance ,
× RELATED அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில்...