×

நாதக வேட்பாளர் உட்பட 10 பேர் மீது வழக்கு

 

வந்தவாசி: வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக மேடை அமைக்கப்பட்டு கூட்டம் ஆரம்பிக்க தயார் நிலையில் இருந்தனர். அப்போது போலீசார், அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தக்கூடாது என தடுத்தனர்.ஆனால், அதை பொருட்படுத்தாமல் தலைமை நிலைய நிர்வாகி துருவம் செல்வமணி, வந்தவாசி தொகுதி வேட்பாளர் கணேஷ் ஆகியோர் கூட்டத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இதையறிந்த தேர்தல் நிலை குழு கண்காணிப்பாளர் முனியப்பன், அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் துருவம் செல்வமணி, பாவேந்தன், பூபாலன் சரவணன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags : Nataka ,Vandavasi ,Naam Tamilar Katchi ,Vandavasi Fort ,
× RELATED அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில்...