×

ஈரானில் சிக்கி தவிக்கும் 700 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

 

சென்னை: ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: குமரி மாவட்டம் கடியப்பட்டணம், குளச்சல், இணையம் மற்றும் முட்டம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 மீனவர்கள் ஈரானில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் ஈரானில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

ஈரான் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இடையிலான உக்கரமான போர் பகுதியில் சிக்கித் தவிக்கும் 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் மீன்பிடி விசைப்படகுகளில் கடந்த மூன்று வார காலமாக முடங்கியுள்ளனர். இது தொடர்பாக மீனவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள காணொலியில், எந்த நேரத்தில் உயிர் பறிபோகுமோ என்று குண்டு வீச்சுக்கு இடையில், உணவு தண்ணீர் இன்றி விசைப்படகுகளில் தங்கி உள்ளோம் என்று அச்சத்துடன் குறிப்பிட்டுள்ளனர். எனவே ஒன்றிய அரசு தமிழ்நாடு மீனவர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

Tags : Nadu ,Iran ,Vaiko ,Chennai ,MDMK ,General Secretary ,Kumari district ,Kadiyapatnam ,Kulachal ,Kannada ,Muttam… ,
× RELATED அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில்...