×

லால்குடி அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

 

லால்குடி,மார்ச் 21: லால்குடி அருகே திருச்சி – அரியலூர் சாலை புள்ளம்பாடி பகுதியில் வாகன சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புள்ளம்பாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது வந்த காரை வழிமறித்து அலுவலர்கள் சோதனையிட்டனர். அதில் திருச்சி பொன்மலை கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் ரூ.1 லட்சம் வைத்திருந்ததாக தெரிகிறது. இதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என கேட்ட போது முன்னுக்கு பின் பதில் கூறியுள்ளார். ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்தை கைப்பற்றி 143 லால்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Lalgudi ,Pullambadi ,Trichy-Ariyalur road ,
× RELATED திருச்சி துறையூர் அருகே வாகன சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல்