×

ரூ.43 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

அரூர், மார்ச் 21:கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. சந்தையில் ஆடு, கோழிகள் விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆடுகள் ரூ.5,100 முதல் ரூ.10,500 வரை மொத்தம் ரூ.43 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Aroor ,Kampinallur ,Uthankarai ,Tirupattur ,Ambur ,Karimangalam ,Krishnagiri ,Dharmapuri ,Salem ,
× RELATED விடுமுறை தினம் என்பதால்...