×

சிறப்பு முகாமில் இருந்து 33 நபர்கள் வங்கதேசத்திற்கு அனுப்பி வைப்பு

கெங்கவல்லி, மார்ச் 21: ஆத்தூரில், தண்டனை காலம் முடிந்து சிறப்பு முகாமிலிருந்து 33 வங்கதேச நபர்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகம் அருகே, மாவட்ட சிறை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி வங்கதேச சிறப்பு முகாமாக மாற்றப்பட்டது. இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள், சிறுவர்கள் உட்பட 211 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 9 குழந்தைகள் உட்பட 75 பேருக்கான தண்டனைக்காலம் முடிவடைந்தன. இதையடுத்து அவர்களை விடுவிக்க ஆத்தூர் தாசில்தார் பாலாஜி, சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவிக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில வங்கதேச தூதரக அலுவலர் சோமன் தேப், ஹரிஷ்குமார் ஆகியோர், வங்கதேச சிறப்பு முகாமில் தண்டனை முடிந்த 75 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், 2ம் கட்டமாக நேற்று 33 பேர் வங்கதேச நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை சேலம் ஆயுதப் படை காவல் துணை கண்காணிப்பாளர் சக்தி வேல் தலைமையில், 41 போலீசார் பாதுகாப்பாக ரயில் மூலம் வங்கதேச நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Bangladesh ,Gengavalli ,Attur ,Attur taluka ,Salem district ,
× RELATED மகனை தேடி சென்ற மீன் வியாபாரி மாயம்