×

விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு கல்லூரி மாணவிகள்

சேலம், மார்ச் 24: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி பார்வையிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், 13,70,962 ஆண் வாக்காளர்கள், 13,84,548 பெண் வாக்காளர்கள் மற்றும் 320 இதரர் என மொத்தம் 27,55,830 வாக்காளர்கள் உள்ளனர். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில், சேலம் மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி, வாகன பேரணி, சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, சேலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வாக்காளர் உதவி எண்ணாண 1950 மற்றும் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வோட் 100% ஆகிய வடிவங்கள் காட்சியமைக்கும் படியாக 500க்கும் மேற்பட்ட மாணவிகள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, சேலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவை, கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார். முன்னதாக, அரசு மகளிர் கல்லூரியில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள இருப்பறையை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Salem ,District Election Officer ,Collector ,Brindadevi ,Salem Government Women's Arts and Science College ,Tamil Nadu Assembly ,Salem… ,
× RELATED மகனை தேடி சென்ற மீன் வியாபாரி மாயம்