×

பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

இடைப்பாடி, மார்ச் 23: விடுமுறை தினத்தையொட்டி, பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள் விசைப்படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இடைப்பாடி அருகே பூலாம்பட்டியில், நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனர். குடும்பம், குடும்பமாக வந்த அவர்கள், அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து, விசைப்படகில் உற்சாக சவாரி செய்தனர்.

மேலும் இயற்கை காட்சிகளை கண்டு களித்து மகிழ்ந்தனர். அருகில் உள்ள ஓட்டல்கள், மீன் கடையில் வியாபாரம் களை கட்டியது. தொடர்ந்து கைலாசநாதர் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில், படித்துறை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

 

Tags : Poolambatti ,Edappadi ,
× RELATED தபால் வாக்களிப்பு குறித்த பயிற்சி வகுப்பு