×

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

சேலம், மார்ச் 24: சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் 2லட்சத்து 24ஆயிரத்து 97 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 09 ஆயிரத்து 918 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 130 பெண் வாக்காளர்களும், 49 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 73 வாக்குச்சாவடி மையங்களில் 268 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 12 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் சுகவீர் சைனி நேற்று தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில், குமரகிரிபேட்டை, எருமாபாளையத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதியும் செய்யப்பட்டுள்ளதா, பாகம் எண் எழுதப்பட்டுள்ளதா, மாற்றுத் திறனாளிகள் வாக்கு அளிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். மேலும், கண்காணிப்பு கேமரா வசதி அமைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவன், உதவி தேர்தல் அலுவலர் தமிழ்வேந்தன் மற்றும் தேர்தல் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Salem ,Salem South Assembly Constituency ,
× RELATED மகனை தேடி சென்ற மீன் வியாபாரி மாயம்