×

கறிக்கோழி பண்ணைக்கான வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி, பிப்.16: கிருஷ்ணகிரி மாவட்ட கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சரவணன், பெரியண்ணன், தங்கவேலு ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ்சிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணைகளை நம்பி 10 ஆயிரம் குடும்பத்தினர் உள்ளனர்.

பெரும்பாலும் விவசாயிகளே, கோழிப்பண்ணைகள் அமைத்துள்ளனர். இதற்காக கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் கடனை பெற்றுள்ளனர். கொரோனா ஊரடங்கின்போது பண்ணைகள் செயல்படவில்லை. கோழிகளை வளர்க்க முடியாமலும், விற்பனை செய்ய வழியில்லாமலும் உயிருடன் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தோம். மேலும், கோழிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படுவதால் அதிகளவில் இழப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே, தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது போல், நாங்கள் கறிக்கோழி பண்ணை அமைக்க வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்து, எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : broiler farm ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு