பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 20: கரும்பு தோட்டத்தில் தீ வைத்ததில், பக்கத்து தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்கள் தீ பிடித்து எரிந்தது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கூக்கடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் கிருபா(30), விவசாயி. இவர் நிலத்தில் பயிரிட்டிருந்த கரும்பை அறுவடை செய்துவிட்டு சோகைக்கு நேற்று முன்தினம் மாலை தீ வைத்துள்ளார். அவரது தோட்டத்தின் அருகில் சசிகுமார்(46) என்பவரது பாக்கு தோப்பு உள்ளது. கிருபா, கரும்பு சோகைக்கு தீ வைத்தபோது, பாக்கு மரங்களில் தீப்பிடித்தது. இதுபற்றி சசிகுமார் கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
