×

கமல்ஹாசன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் அவசரக் கூட்டம்!

 

சென்னை: சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் அவசரக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; தலைவர் கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு & செயற்குழு அவசரக் கூட்டம்! சுற்றறிக்கை; 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், தலைவர் கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் நாளை 20.03.2026 (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சென்னையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரம் : மாலை 5 மணி; இடம்: ஹோட்டல் சாம்கோ, 5வது வீதி, A J பிளாக், அண்ணா நகர், சென்னை 600040, நன்றி! நாளை நமதே! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : District Secretaries ,Executive Committee ,Kamalhassan ,Chennai ,Kamal Hassan ,People's Justice Ministry ,
× RELATED பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கனமழை...