சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான 3 நாட்களில் ரூ.42.65 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ரொக்கமாக ரூ.2.37 கோடி, ரூ.2.88 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.20.8 கோடி மதிப்பிலான இலவசங்கள்/ பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.18 லட்சம் மதிப்பிலான மதுபானம், ரூ.16.42 கோடி மதிப்புள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
