×

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் 813 வழக்குகளுக்கு தீர்வு

கோவில்பட்டி, மார்ச் 18: கோவில்பட்டியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 813 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், (எண்.1) (எண்.2) மணிமேகலா ஆகியோர் முன்னிலையில், பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு குறு வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்குகள் உள்பட 1,074 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், 813 வழக்குகளுக்கு சமரசம் மூலம் ரூ.1 கோடியே 33 லட்சத்து 82 ஆயிரத்து 672க்கு தீர்வு காணப்பட்டது. இதில் வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : National People's Court ,Kovilpatti ,Marikkalai ,District ,Civil ,Judge ,Karuppasamy ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...