×

கோயில்களில் நகை, பணம் கொள்ளை

பட்டிவீரன்பட்டி, மார்ச் 25: பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் அரசமர பேருந்து நிறுத்த பகுதியில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோயில் மற்றும் சித்தரேவு ரோட்டில் கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோயில் அமைந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த கோயில்களின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று விட்டனர்.

முருகன் கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் உண்டியல்களை உடைத்து திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

 

Tags : Pattiveeranpatti ,Selva Vinayagar Temple ,Ayyampalayam Arasamara ,Kodumudi Theerthakavadi Sangam Murugan Temple ,Chittarevu Road ,
× RELATED நத்தம் கோட்டையூரில் காளியம்மன் கோயில் திருவிழா