×

சாதுரியம்… சாகசம் சபலென்கா சாம்பியன்

 

நேற்று முன்தினம் இரவு நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தானுக்காக ஆடிவரும் எலெனா ரைபாகினா (26) உடன் மோதினார். முதல் செட்டில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய ரைபாகினா 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2வது செட்டில் சுதாரித்து அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார்.

அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை கைப்பற்றி இரு வீராங்கனைகளும் கடுமையாக போராடினர். அதனால், டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை 7-6 (8-6) என்ற புள்ளிக் கணக்கில் சாதுரியமாக சபலென்கா வசப்படுத்தினார். அதையடுத்து 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய அவர் முதல் முறையாக இண்டியன்வெல்ஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Tags : Sabalenka ,Aryna Sabalenka ,Belarus ,Elena Rybakina ,Kazakhstan ,
× RELATED 2026 ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான...