×

மான்டேகார்லோ டென்னிஸ் ஜோகோவிச் விலகல்

மொனாக்கோ: செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38), 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் ஆடிவந்த அவர் இண்டியன்வெல்ஸ் போட்டியில் 4வது சுற்றில் தோற்றார்.

அதன் பின் நடந்த மயாமி ஓபன் டென்னிசில், தோள் பட்டை காயத்தால் ஆடவில்லை. இந்நிலையில், மொனாக்கோவில், வரும் ஏப்ரல் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. காயம் குணமாகாததால், மான்டேகார்லோ போட்டிகளிலும் ஆடப்போவதில்லை என ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

Tags : Monte Carlo ,Djokovic ,Monaco ,Novak Djokovic ,Indian Wells ,Miami Open ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...