×

சென்னை-ராஜஸ்தான் அணிகள் மல்லுக்கட்டு

கவுகாத்தி: ஐபிஎல் 19வது தொடரின் 3வது போட்டி, கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் கடந்த 2025ல் நடந்த ஐபிஎல் போட்டிகளில் மோசமான தோல்வியை தழுவி வெளியேறின.

லீக் போட்டிகளின் முடிவில் சென்னை அணி கடைசி இடத்தையும், ராஜஸ்தான் அணி 9ம் இடத்தையும் பிடித்தன. தற்போதைய போட்டியில் இந்த அணிகள் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றில் நுழைய தீவிர முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல்லில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகிய இருவரும், இந்தாண்டு ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு மாற்றாக, சென்னை அணிக்கு அளிக்கப்பட்ட சஞ்சு சாம்சன், சென்னை அணியின் பேட்டிங் வலிமையை உயர்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்றைய போட்டியில் இந்த வீரர்கள் தாங்கள், நீண்ட காலமாக ஆடிவந்த அணிகளுக்கு எதிராக ஆடவுள்ளது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி, கெண்டைக்காலில் ஏற்பட்ட காயத்தால் அடுத்த 2 வாரங்களுக்கு ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

* நேருக்கு நேர்
* சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 31 முறை மோதியுள்ளன.
* அவற்றில் சென்னை 16 முறையும், ராஜஸ்தான் 15 முறையும் வென்றுள்ளன.
* இப்போட்டிகளில் சென்னை அணி, அதிகபட்சமாக 246 ரன்களும், ராஜஸ்தான் அணி 223 ரன்களும் எடுத்துள்ளன.
* சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 109. ராஜஸ்தானின் குறைந்த ஸ்கோர் 126.
* கடந்த ஐபிஎல்லில், இந்த அணிகள் மோதிய 2 போட்டிகளிலும் ராஜஸ்தானே வென்றுள்ளது.

Tags : Chennai ,Rajasthan ,Guwahati ,edition ,IPL ,Chennai Super Kings ,CSK ,Rudraj Gaikwad ,Rajasthan Royals ,RR ,Ryan Barak ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...