- மணங்காத்தான்
- காயதரு
- தெற்கு
- இலந்தைகுளம்
- பஞ்சாயத்து
- காயத்தாறு ஊராட்சி ஒன்றியம்
- தூத்துக்குடி
- வடக்கு
- மாவட்டம்…
கயத்தாறு, மார்ச் 17: கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்திற்குட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த இதன் திறப்பு விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி இணை அமைப்பாளர் பிரியா குருராஜ் ரிப்பன் வெட்டி கலையரங்கத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு இலந்தைகுளம் பஞ். முன்னாள் தலைவி செல்வி ரவிக்குமார், திமுக மகளிரணி கருமாரியம்மாள், சுமதி, செல்லத்தாய், கிளை செயலாளர்கள் ஆறுமுகம், குமார், ராஜாபுதுக்குடி சதீஷ்குமார், திமுக பிரதிநிதி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மானங்காத்தான் திமுக கிளை செயலர்கள் நாகூர் கனி மற்றும் துரைராஜ் செய்திருந்தனர்.
