சேந்தமங்கலம், மார்ச் 17 : கொல்லிமலை அடிவாரம் வனப்பகுதி காப்புக்காடு பகுதியில் மண்வெட்டி கடத்திய 2 பேருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில், வனத்துறைக்கு சொந்தமான ஜம்பூத்து காப்புக்காடு வனப்பகுதியில், கும்பல் ஒன்று கடந்த சில நாட்களாக மண்வெட்டி கடத்தி செல்வதாக, வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், திடீரென அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கும்பல் ஒன்று மண்வெட்டி கடத்திக் கொண்டு இருந்த 3 வாகனங்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், மண்வெட்டி கடத்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மண் கடத்திய வாகனங்களின் உரிமையாளர்கள் 2 பேருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்தார். காப்புக்காடு வனப்பகுதியில் அத்துமீறி தனிநபர் உள்ளே நுழையக் கூடாது. வனத்துறைக்கு சொந்தமான நிலங்களில் மண் கடத்தலில் தனிநபர் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
