×

தஞ்சை மாவட்டத்தில் குழந்தைகள் நல அலுவலர்களுக்கான உளவியல் பயிற்சி

தஞ்சாவூர், மார்ச் 16: டத்தில் இயங்கி வரும் அரசு, அரசு சாரா குழந்தைகள் இல்லங்களில் பணிபுரியும் குழந்தைகள் 500 அலுவலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உளவியல் ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு சமூக விசாரணை அறிக்கை தயாரிப்பது குறித்தும். ஒவ்வொரு குழந்தைகளும் குடும்ப சூழலில் வளரக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துதல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இப்பயிற்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைப்பெற்றது. குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகள், அலுவலர்கள், ஆற்றுப்படுத்துநர்கள் 100 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றனர். இப்பயிற்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் சசிகலா மற்றும் உறுப்பினர்கள் சுபத்ரா, டென்னிஸ்மேரி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். உளவியல் நிபுணர் வைஷ்ணவி சிவக்குமார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

 

Tags : Thanjavur district ,Thanjavur ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்