×

தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஆவணம் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.2.91 லட்சம் பறிமுதல்

பொன்னேரி, மார்ச் 17: பொன்னேரி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 2.91 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். பொன்னேரி அடுத்த நாலூர் ஏரிக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னேரி நோக்கி வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை நடத்திய போது, அண்ணாமலைச்சேரி கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சுரேந்தர் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 2.91 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதனை பொன்னேரி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சீட்டு கட்டிய பணம் என்றும் உரிய ஆவணங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரசு கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.

Tags : Election Flying Squad ,Ponneri ,Nalur Lake ,Ponneri… ,
× RELATED பேரம்பாக்கம் நாகசண்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்