×

இந்த நாள் எண்ணமங்கலம் அணைக்கரடு பகுதியில் புறம்போக்கு நிலத்தை ஒப்படைக்க எதிர்ப்பு; சாலை மறியல்

 

அந்தியூர், மார்ச் 14: அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஊராட்சி, அணைக்கரடு பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அந்தியூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கக்கூடிய நிலமில்லா ஏழைகளுக்கு வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு, நேற்று முன்தினம் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் அளவீடு செய்து உள்ளனர். இந்த நிலையில் இந்த இடத்தை வேறு ஊரைச்சேர்ந்தவர்களுக்கு வருவாய் துறையினர் முழுவதுமாக ஒப்படைப்பதாக, கிராம மக்கள் மத்தியில் தகவல் பரவத்தொடங்கியது.

Tags : Ennamangalam Anicuradu ,Anthiyur ,Anicuradu ,Ennamangalam panchayat ,
× RELATED ஈரோட்டில் ரூ.6.33 கோடியில் திட்டப்பணிகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்