×

வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி; விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு: எல்லைகளில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறை மும்முரம்

 

மேட்டுப்பாளையம், மார்ச் 13: மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி எதிரொலியாக விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சூழலில் வன எல்லைகளில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க வனத்துறையால் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் ஏராளமான யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் தென்படுகின்றன.

Tags : Mettupalayam ,Mettupalayam forest reserve ,Mettupalayam forest ,
× RELATED தேர்தலை முன்னிட்டு 8 தொகுதிகளில் 211 மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி