×

தேர்தல் பிரிவில் விரைவில் மீடியா மானிட்டர் குழு

 

கோவை, மார்ச் 13: கோவை மாவட்டத்தில் மீடியா மானிட்டர் குழு உருவாக்கி தேர்தல் தொடர்பான தகவல்களை சேகரிக்க, விதி மீறல்களை அறிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் வேகமாக நடக்கிறது. அரசியல் கட்சியினர் பல்வேறு செயல்களை ரகசியமாகவும், ஆன்லைன், சோசியல் மீடியாக்கள் மூலமாகவும் செய்து வருகிறார்கள். குறிப்பாக பேஸ்புக்கில் அரசியல் கட்சி, தலைவர்களை விமர்சித்து பல லட்சம் கமெண்ட் குவிவதால் கண்காணிக்க முடியாமல் தேர்தல் பிரிவு திணறுகிறது. கட்சி, நிர்வாகிகள், தேர்தல் கமிஷன், ஓட்டு தொடர்பான விவகாரங்களை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மீடியா மானிட்டர் பிரிவு உருவாக்க ஏற்பாடு நடக்கிறது.  ஓட்டு கேட்டு குவியும் பதிவுகள், செல்போன் எஸ்எம்எஸ் போன்றவற்றையும், விதிமுறை மீறல்களையும் கண்காணிக்கும் வகையில் மீடியா மானிட்டர் பிரிவு இருக்கும். இதில் உள்ள விவரங்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும்.

Tags : Coimbatore ,
× RELATED தேர்தலை முன்னிட்டு 8 தொகுதிகளில் 211 மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி