சத்தியமங்கலம், மார்ச் 14: சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளங்கரடு பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சத்தியமங்கலம் நகர் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு பஸ் போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்து வந்தது.
இப்பகுதி மக்களும் பல ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இப்பகுதிக்கு நாளொன்றுக்கு 4 முறை பேருந்துகள் இயக்க அனுமதி பெறப்பட்டு நேற்று முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது.
