ஈரோடு, மார்ச் 14: ஈரோட்டில் தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தில் தேசிய நலக்குழுமம் மூலம் ரூ.62 லட்சம் மதிப்பில் புதிய அதிநவீன எக்ஸ்ரே பிரிவு அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய அதிநவீன எக்ஸ்ரே பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 12 வகுப்பறை, சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறைகளை பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.
