×

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,\\”பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கான திருத்தம் குறித்து விவாதிப்பதற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அரசை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சி அரசியலில் ஈடுபடக்கூடாது\\” என்று தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அம்சம் அரசியலமைப்பு கூட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின்னரே இது நடைமுறைக்கு வரும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கான ஒரு முறையான முன்மொழிவை தயாரிப்பதற்கான எந்த உத்தரவுகளும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,New Delhi ,Congress party ,general secretary ,information and ,Jairam Ramesh ,
× RELATED மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு...