×

முன்பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி பூ மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம் அறிவிப்பு

திருப்பூர், மார்ச் 12: திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியின் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 96 கடைகள் உள்ளன. இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூ மார்க்கெட்டை ரூ.2 கோடியே 80 லட்சத்துக்கு ஒருவர் ஏலம் எடுத்தார். அவர் ஒவ்வொரு கடை வியாபாரியிடம் தலா ரூ.3 லட்சம் முன் பணம் மற்றும் தினமும் கடைக்கு ரூ.800 வாடகை வசூலித்தார். இந்தநிலையில் 3 ஆண்டு ஏலம் முடிந்ததும், மீண்டும் ஏலம் விடப்பட்டது. புதிதாக இந்த பூ மார்க்கெட்டை ரூ.4 கோடியே 10 லட்சத்துக்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். புதிதாக ஏலம் எடுத்தவர், தற்போது கடை வியாபாரிகளிடம் ரூ.5 லட்சம் முன்பணம், தினமும் ரூ.1,500 வாடகை கேட்கிறார்.

ஏற்கனவே ஏலம் எடுத்தவர் எங்களிடம் பெற்ற ரூ.3 லட்சம் முன் பணத்தை திருப்பித்தரவில்லை. இப்போது ஏலம் எடுத்தவர் மீண்டும் முன்பணம் மற்றும் தினமும் ரூ.1,500 வாடகை கேட்பது மிகவும் அதிகமாக உள்ளது. பணத்தை 20ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் கடையை காலி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏலம் எடுத்த 2 பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்’ என்று கூறியிருந்தனர். இதற்கு 2 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார். அவ்வாறு தீர்வு ஏற்படாவிட்டால் நாளை (13ம் தேதி) பூ மார்க்கெட்டில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

நெய்வேலி நிலக்கரி கழகத்தில் வேலை

2. மைனிங் சிர்தார் (செலக்‌சன் கிரேடு-1): 5 இடங்கள். சம்பளம்: ரூ.26,000- ரூ.1,10,000. தகுதி: மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது ஏதாவதொரு பி.இ.,/பி.டெக்., படிப்பை மைனிங் சிர்தார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். கட்டணம்: ஜூனியர் ஓவர்மேன் பணிக்கு ரூ.550/-. மைனிங் சிர்தார் பணிக்கு ரூ.450/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் புராசசிங் கட்டணமாக ஜூனியர் ஓவர்மேன் பணிக்கு ரூ.250/-, மைனிங் சிர்தார் பணிக்கு ரூ.200 ஐ செலுத்த வேண்டும். இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் குவாண்டிடேட்டிவ் அப்டிடியூட்/ரீசனிங் மற்றும் ஜெனரல் அவர்னெஸ் ஆகிய பிரிவுகளிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். கடலூர் மாவட்டம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள ஜூனியர் ஓவர்மேன்/மைனிங் சிர்தார் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் அவிநாசி நகராட்சி கமிஷ்னர் வேண்டுகோள் www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2026.

Tags : Tiruppur ,Tiruppur Corporation ,Tiruppur Veeraraghava Perumal Temple ,Commissioner ,Amit.… ,
× RELATED உபரிநீரை குளத்தில் நிரப்ப வேண்டும்