திருப்பூர், மார்ச் 12: திருப்பூரில் குரு சர்வா அகாடமி சிஏ படிப்பிற்கென்றே முழுநேர பயிற்சி வகுப்புகளுடன் பழைய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 26ல் நடைபெற்ற சிஏ பவுண்டேஷன் தேர்வில் இங்கு பயின்ற பிரணவிகா 337/400, சஞ்சித் 336/400 மற்றும் சஷ்டிகா 300/400 மதிப்பெண்களுடனும் திருப்பூர் மாவட்ட அளவில் சிறப்பிடங்கள் பெற்றதோடு சுமன் 294/400, தீப்சிகா 280/400 மௌனிதா 280/400 மதிப்பெண்கள் பெற்று 6 மாணவர்கள் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், இன்டர் தேர்வில் முதல் முயற்சியிலேயே இரண்டு குரூப்புகளிலும் 417/600 மதிப்பெண்களுடன் மகாலட்சுமி டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்ததோடு பிரதன்யா 321/600, கௌரிவேல் 308/600 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மதுமிதா காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்ட்டிங் பாடப்பிரிவில் 97/100 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்திருக்கிறார். இக்கல்வி நிறுவனமானது பவுண்டேஷன் தேர்வில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று வருவதோடு ஏற்கனவே சிஏ இன்டர் தேர்வில் தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அனுபவம் வாய்ந்த ஆடிட்டர்களால் வகுப்புகள் எடுக்கப்படுவதோடு அடிக்கடி மாதிரித்தேர்வுகள் நடத்துவதாலும் ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக்கவனம் செலுத்தப்படுவதாலும் இச்சாதனைகளை தொடர்ந்து 12 ஆண்டுகளாக இக்கல்வி நிறுவனம் சாதித்து வருகிறது.
இப்போது பவுண்டேஷன் மற்றும் இன்டர் பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு 9600922888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
