×

மகளிர் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

அவிநாசி, மார்ச் 9: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் விமலா, கலாமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில், பெண்களுக்கான சட்ட உரிமைகள் குறித்தும் பெண்களின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் அரசு வழங்கியுள்ள இலவச தொலைபேசி அழைப்பு உதவி எண்களின் பயன்பாடு குறித்தும் விளக்கி பேசினர்.

விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் திங்களவள் கலந்து கொண்டு பேசுகையில், ‘பெண்களின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் இருக்கும் சட்டங்கள் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியில் “விழுதுகள்” தன்னார்வ அமைப்பு இயக்குநர் தங்கவேல், திட்ட மேலாளர்கள் கோவிந்தராஜ், சந்திரா ஒருங்கிணைப்பாளர் சுதா, நிதி செயலாளர் சாரதாம்பாள், ஒருங்கிணைப்பாளர்கள் சூர்யா, அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

Tags : Women's Day Awareness Signature Drive ,Avinashi ,Avinashi New Bus Stand ,International Women's Day ,All Women Police Station ,Special Assistant Inspectors ,Vimala ,Kalamani ,
× RELATED சட்டமன்ற தேர்தல் காங்கிரசார் ஆலோசனை