×

மலையாண்டிபட்டணத்தில் திமுக தேர்தல் பிரசாரம் துவக்கம்

 

உடுமலை, மார்ச் 10: மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மலையாண்டிபட்டணம் பகுதியில் திமுக சார்பில் பிஎல்ஓ 2, செல்வம், கிளை செயலாளர் நடராஜ், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோருடன் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்கிற தலைப்பில் திமுக மகளிர் அணியினர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். இதையொட்டி ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தமிழக அரசின் மகளிர் நல திட்டங்களான மகளிர் உரிமை தொகை, கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், புதுமைப் பெண், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை விளக்கி கூறி ஆதரவு திரட்டினர்.

Tags : DMK ,Malayandipattanam ,Udumalai ,DMK women ,PLO 2 ,Selvam ,Nataraj ,treasurer ,Karthikeyan ,Vellum Tamil Women ,Madathukulam ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்