×

சட்டமன்றத்தேர்தல் பணிக்கு எல்லை பாதுகாப்பு படை குழுவினர் அரியலூர் வருகை

 

ஜெயங்கொண்டம், மார்ச். 11: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர் நேற்று அரியலூர் வந்தனர். அரியலூர் மாவட்டம் குவாகம் காவல் நிலைய ஆய்வாளர் பெரோஸ்கான் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் அகமது உசேன் ஆகியோர் சேலம் ரயில் நிலையம் சென்று அங்கு வந்திருந்த எல்லை பாதுகாப்புப்படை குழுவினர் 45 பேரை வரவேற்று அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர். அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை பாதுகாப்புடன் நடைபெற பாதுகாப்புப்படை குழுவினர் முதல் கட்டமாக வந்துள்ளனர்.

Tags : Border Security Force ,Ariyalur ,Jayankondam ,Ariyalur district ,Tamil Nadu ,Guvagam police ,Feroz Khan ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன பேரணி