×

உலகப் பத்திரிகைகளே சூப்பர் ஸ்டார் ஸ்டேட் தமிழ்நாடு என்று பாராட்டுகின்றன: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருச்சி: திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்றுள்ளனர். திருச்சி மாநாட்டில் 110 அடி உயர கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றினார்.  தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாறினார்.

முதல்வர் உரையில்:
திருச்சியில் பெரும்சேனை திரண்டிருக்கிறது; என்னுடைய அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. திருச்சியில் நடைபெறுவது திமுகவின் பெரிதினும் பெரிதான மாநில மாநாடு. கடந்த 3 மாதங்களாக நாம் நடத்துவது அனைத்தும் மாநாடுகள்தான். மண்டல வாரியாக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி நடத்தினார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை நடத்தினார்.

தொண்டர்களின் அன்புதான் என்னை இளமையாக வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களாக நாம் நடத்துவது அனைத்தும் மாநாடுகள்தான். மண்டல வாரியாக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி நடத்தினார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை நடத்தினார். திருச்சியில் நடைபெறுவது திமுகவின் பெரிதினும் பெரிதான மாநில மாநாடு.  எப்போதும் பிரமாண்டமாக மாநாடு நடத்துவதுதான் கே.என்.நேருவின் பாணி. திமுக நடத்திய 12 மாநில மாநாடுகளில் 7 மாநாடுகள் திருச்சியில்தான் நடந்துள்ளன.

திருச்சி என்றாலே திருப்பம், திருச்சி என்றாலே எழுச்சி. தந்தை பெரியார் வாழ்ந்தது திருச்சியில்தான். அண்ணாவும் கலைஞரும் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது திருச்சியில்தான். கல்லக்குடி போராட்டத்துக்காக கலைஞர் கைது செய்யப்பட்டதும் திருச்சியில்தான். கைக்குழந்தையாக இருந்த என்னை எனது தாயார் கலைஞரிடம் காட்டியதும் திருச்சியில்தான்

கிரிக்கெட்ல முதல் பந்துல இருந்தே ரன் அடிக்கிறது முக்கியம்தான். அதேசமயம் இறுதி ஓவர்களில் அடித்து ஆடி, கடைசி பந்துல Winning Shot-ஆ சிக்ஸர் அடித்து ஜெய்க்கிறது Grand Finishing-ஆ இருக்கும். அப்படிப்பட்ட வெற்றியை பெறுவதற்காகதான் இந்த மாநாடு. 2026ம் ஆண்டு தேர்தல் வெற்றி, கிராண்ட் ஃபினிசிங் போல் பிரமாண்டமானதாக இருக்கும்.

இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலக் கட்சியை ஆட்சியில் அமர்த்தியவர் அண்ணா. தமிழர்களைக் காக்க தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுகதான். தமிழ்நாட்டை நம்பித்தான் நாம் இருக்கிறோம். நம்மை நம்பித்தான் தமிழ்நாடு இருக்கிறது. 2021ல் இதே ஊரில் நடந்த மாநாட்டில் 7 இலக்குகளை அறிவித்தோம். அந்த இலக்குகளை இன்று எட்டி சாதனை படைத்துள்ளோம்; ஒன்றிய அரசின் புள்ளி விபரங்களே இதனை உறுதிப் படுத்துகின்றன நம்பர் 1 மாநிலம் என ஒன்றிய அரசு சொல்கிறது; சூப்பர் ஸ்டேட் என பத்திரிகைகள் சொல்கின்றன

திமுக அரசின் திட்டப் பயனாளிகள் வாக்களித்தாலே போதும், நமக்கு முழு வெற்றி கிடைக்கும்; அதை உறுதி செய்வதுதான் உங்கள் பணி. சமீப காலமாக தவணை முறையில் சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன; அதுவும் திராவிட மாடல் அரசின் திட்டத்தை டாப்-அப் செய்து அறிவிக்கின்றனர் ஏனென்றால் அந்த திட்டங்களில் எல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ யோசிக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும் எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை நாம் கொண்டு வந்துருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க உள்ளது என்பதை அறிந்தும், அதற்காகக் கூட பட்ஜெட்டில் மாநிலத்திற்கு எந்த திட்டங்களையும் ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. இந்த அளவுக்கு திட்டமிட்டு தமிழ்நாட்டை புறக்கணிக்கும் NDA கூட்டணிக்கு எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்.? பீகாரில் நிதிஷ் குமார் முகத்தைக் காட்டி ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது அவரை அகற்றி விட்டு முதலமைச்சர் பதவியைப் பிடிக்க உள்ளது பாஜக இதே போல எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியாது. திமுக இருக்கும் வரை அது நடக்காது.

Tags : Tamil Nadu ,K. Stalin ,Tiruchi ,12th State Conference of Dimukhin ,Trichy Siruganur ,Chief Minister ,Mu. K. ,Stalin ,MLA ,Trichchi Conference ,
× RELATED உலகப் பத்திரிகைகளே சூப்பர் ஸ்டார்...