சென்னை : ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நோயைவிட மோசமான மருந்து என்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து பல்வேறு நாடுகளின் தேர்தல் முறையை ஒப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு :
*ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நோயைக் குணப்படுத்த அதைவிடக் கொடுமையான ஒரு மருந்தைத் தருவதற்கு சமம்.
*இது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையே தலைகீழாக மாற்றும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல் இது.
*தேர்தல்களை நடத்துவதில் இருக்கும் நிர்வாகச் சிக்கல்களுக்காக ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே முடக்க நினைப்பது தவறு.
*இது மெல்ல மெல்ல ஒரு ‘அதிபர் ஆட்சி’ முறைக்குத் தள்ளி, மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்துவிடும்.
*நிர்வாக வசதிக்காக அரசியலமைப்புச் சமநிலையையும், மக்களின் உரிமைகளையும் பலி கொடுக்கக் கூடாது.
*ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில சட்டமன்றங்களை பலவீனப்படுத்தும் செயல். இது கூட்டாட்சிக்கு முறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
