×

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி கடும் பாதிப்பு : வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!!

டெல்லி : சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வளைகுடா போர் காரணமாக இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள கச்சா எண்ணெய் கையிருப்பு குறைந்து வருகிறது. அடுத்த 20 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, உற்பத்தி செய்யப்படும் சமையலுக்கு பயன்படும் எல்பிஜி என்னும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.115 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதே போல், வீட்டு உபயோக 2 சிலிண்டர் வைத்திருப்பவர் 1 முறை பதிவு செய்தால் 30 நாளுக்குப் பின் மீண்டும் புக் செய்ய முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் தொடரும் என அறிவிக்கப்பட்ட போதிலும், வரும் நாட்களில் இதற்கும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags : Iran War ,Delhi ,India ,Gulf War ,
× RELATED உணவு உற்பத்திக்கும் பாதிப்பை...