×

செய்யாறு அருகே பைரவபுரம் கிராமத்தில் சொர்ணகால பைரவர் கோயில் மகா கும்பாபிஷேக விழா: எம்பி, எம்எல்ஏ, பக்தர்கள் பங்கேற்பு

 

செய்யாறு, மார்ச் 9: செய்யார் அடுத்த வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி ஊராட்சிக்கு உட்பட்ட பைரவபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சொர்ணகால பைரவர் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ரூ.36 லட்சத்தில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 6ம் தேதி தனுர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி ப்ரவேச பலியும், நேற்று முன்தினம் கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, வேதிகா அர்ச்சனை, திரவிய ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையும், மாலை மூன்றாம் கால யாக பூஜை, ஹோமம் நிகழ்த்தப்பட்டது.

Tags : Maha Kumbabhishekam ,Sornakala Bhairava temple ,Bhairavapuram ,Cheyyar ,MLA ,Vembakkam ,Hindu Religious and Endowments Department ,Ashtabandhan… ,
× RELATED விடுமுறை தினமான நேற்று சாத்தனூர்...